தம்பி மனைவியை கொல்ல முயற்சி பெண் கைது

பெரம்பூர்: புளியந்தோப்பு எம்.எஸ் முத்து நகரை சேர்ந்தவர் ரேகா (32). கடந்த ஜனவரி மாதம் மாவா விற்ற வழக்கில்  புளியந்தோப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த ரேகா,  தன்னை போலீசில் காட்டிக் கொடுத்தது தனது தம்பி ராஜேஷின் மனைவி சத்யா (30) என்று  சந்தேகப்பட்டுள்ளார்.  இந்நிலையில் கடந்த 10ம் தேதி அதே தெருவில் வசிக்கும் தம்பி வீட்டிற்கு சென்று  சத்யாவிடம் இது குறித்து கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. ஒருகட்டத்தில்  கோபத்தின் உச்சிக்கு சென்ற ரேகா, ‘ என்னை காட்டிக்கொடுத்த நீ உயிரோடு இருக்கக்கூடாது’’ என கூறி சத்யா மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயன்றதாக கூறப்படுகிறது.   இதுகுறித்த புகாரின்பேரில் புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேகாவை நேற்று மதியம் 2 மணிக்கு கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : The man's wife, trying to kill, arrested the woman
× RELATED 4 வயது பெண் குழந்தையை தாக்கி மது...