உத்தரப்பிரதேசத்தில் வேன்- லாரி மோதல்; 8 பேர் பலி

சாம்பல்: உத்தரப் பிரதேசம் மாநிலத்தில்  வேன் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் 8  பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயங்களுடன்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உத்தரப் பிரதேச மாநிலம்  மொரதாபாத்-ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு மினி வேன்  ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. நள்ளிரவில் ரெஹ்ரவன் கிராமம் அருகே, எதிர்திசையில் வந்த சரக்கு லாரி ஒன்று ஓட்டுநரின்  கட்டுப்பாட்டை இழந்து வேன் மீது மோதியது.

இந்த விபத்தில்  வேனில் பயணித்த 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  உயிரிழந்தனர். மேலும்  11 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ  இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் 8 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு  பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  வேனில்  பயணித்தவர்கள் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று வீடு  திரும்பிக் கொண்டிருக்கும்போது விபத்தில் சிக்கியது விசாரணையில்  தெரியவந்துள்ளது.


Tags : Van ,conflict ,Uttar Pradesh , Uttar Pradesh, van- lorry collision, killing
× RELATED உத்தரபிரதேசத்தில் முத்தலாக் கூறி...