3,000 டாஸ்மாக் கடைகளில் கேமரா பொருத்த முடிவு

கோவை: தமிழகத்தில் 3,590 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இதில் 3 ஆயிரம் கடைகளில் 6 ஆயிரம் கண்காணிப்பு கேமரா அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. வீடியோ மேனேஜ்மெண்ட் சிஸ்டம் (வி.எம்.எஸ்) என்ற பெயரில் கண்காணிப்பு கேமரா திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மண்டலம் மற்றும் தலைமை அலுவலகம் என இரு அளவில் கண்காணிப்பு பணி நடத்தப்படும். டாஸ்மாக் கடைகளின் விற்பனைகளில் முறைகேடு நடப்பதாக தெரியவந்துள்ளது. பெட்டி பெட்டியாக மதுபானங்களை கடத்தி பாரில் வைத்து விற்பனை செய்வதும், முறைகேடாக விற்பனை செய்பவர்களுக்கு சப்ளை செய்வதும் நடக்கிறது. டாஸ்மாக் கடைகளில் நேர விதிமுறை பின்பற்றப்படுவதில்லை. பெட்டிக்கடை, ஓட்டல்களில் மதுபானம் விற்பனை செய்ய டாஸ்மாக் கடைகளில் பணியாற்றுவோர் விதிமுறை மீறி பாட்டில்களை வழங்குவதுதான் முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

டாஸ்மாக் கடைகளில் குறைந்தபட்ச விலையைவிட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. இதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், கேரளா, கர்நாடகா மாநிலங்களை போல் வி.எம்.எஸ் திட்டத்தை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் அறிமுகப்படுத்த கடந்த ஆண்டு டிசம்பரில் டெண்டர் விடப்பட்டது. ஒப்பந்த நிறுவனங்களின் மதிப்பீடு தொகை அதிகமாக இருந்ததால் டெண்டர் இறுதி செய்யப்படவில்லை. தற்போது 2வது முறையாக டெண்டர் வெளியிடப்பட்டது. வரும் ஜூலை 10ம் தேதி இதற்கான டெண்டர் திறக்கப்படவுள்ளது. 15 ேகாடி ரூபாய் செலவில் 3 ஆயிரம் டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு கேமரா திட்டம் செயலாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு கடையிலும் இரு கேமரா வீதம் 6 ஆயிரம் ேகமரா அமைத்து குரல் பதிவுடன் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலமாக அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்தபடியே விற்பனை நிலவரங்களை ஆய்வு செய்யலாம்.

× RELATED சேலத்தில் செயல்படும் விதை விற்பனை கடைகளில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு