×

குமரியில் கடல் நீர்மட்டம் குறைந்ததால் தரை தட்டிய படகு

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில்  கடல் நீர்மட்டம் குறைவு காரணமாக நேற்று காலை சுமார் ஒரு மணி நேரம் படகு சேவை பாதிக்கப்பட்டது. சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு  சீசன் காலம் என்று இல்லாமல் தினசரி உள்நாடு, வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா  பயணிகள் வந்து செல்கின்றனர். இப்படி வருகின்றவர்கள் கடல் நடுவே உள்ள  விவேகானந்தர் பாறை, 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பூம்புகார்  கப்பல் போக்குவரத்து கழகம் இயக்கும் படகில் சென்று பார்த்து மகிழ்கின்றனர்.  வழக்கமாக காலை 8.30 மணிக்கு படகு சேவை தொடங்குவது வழக்கம். அதன்படி நேற்று காலை திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறைக்கு செல்ல ஏராளமான  சுற்றுலா பயணிகள் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு  திரண்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் டிக்கெட்டுக்காக காத்து இருந்தனர்.

ஆனால், திடீரென கடலில் நீர்மட்டம் குறைந்தது. இதனால் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படும் படகுகள் தரை தட்டி நின்றன. இதையடுத்து 8.30 மணிக்கு படகு சேவை தொடங்கவில்லை. படகுசேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு  உள்ளதாக அதிகாரிகள் அறிவித்தனர். பின்னர், 9.30 மணியளவில் நீர்மட்டம் வழக்கமான நிலைக்கு வந்தவுடன் படகுசேவை தொடங்கப்பட்டது. இதனால், நீண்டநேரம் காத்திருந்த சுற்றுலா பயணிகள், படகில் பயணித்து மகிழ்ந்தனர்.

Tags : Kumari , Kumari, sea level, ground boat
× RELATED சித்திரை மாத பிறப்பையொட்டி குமரி...