×

23ம் தேதி நடைபெற இருந்த நடிகர் சங்கத்தேர்தலை நிறுத்த உத்தரவு: கவர்னருடன் விஷால் சந்திப்பு

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்தி வைக்க மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். நடிகர் சங்கத்துக்கு வரும்  23ம் தேதி தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது. இப்போது நிர்வாகிகளாக இருப்போர் பாண்டவர் அணி சார்பில் மீண்டும் போட்டியிடுகின்றனர். பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணி எதிர்த்து போட்டியிடுகிறது. சென்னை அடையாறு,  எம்ஜிஆர்-ஜானகி கலைக்கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த முடிவு  செய்தனர். ஆனால், அந்த இடத்தில் நடிகர் சங்க தேர்தலுக்கு போதிய பாதுகாப்பு  வழங்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநகர காவல்துறை தெரிவித்தது.

நடிகர்  சங்க தேர்தலை குறிப்பிட்ட கல்லூரியில் நடத்த முடியாது என நீதிமன்றம்  கூறியது. இதற்கிடையே, நடிகர் சங்கத்தின் 61 உறுப்பினர்கள் மாற்றம்  செய்யப்பட்டது குறித்து விளக்கம் கேட்டு தென்சென்னை மாவட்ட சங்க பதிவாளர்  நடிகர் சங்கத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார்.இந்நிலையில், நடிகர்  சங்கத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் நடந்திருப்பதாக கூறி  இத்தேர்தலை நிறுத்த மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். நடிகர் சங்க  தேர்தல் நிறுத்தப்பட்ட விவகாரம் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே தமிழக கவர்னர்  பன்வாரிலால் புரோகித்தை கிண்டி ராஜ்பவனில் நேற்று மதியம் நடிகர் சங்க  பொதுச்செயலாளர் விஷால், துணை தலைவர் கருணாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில்  சந்தித்தனர். இச்சந்திப்பில் கவர்னரிடம் நடிகர் சங்க தேர்தல் விவகாரம்  குறித்து நிர்வாகிகள் பேசியுள்ளனர்.

விஷால் மனு விசாரணை தள்ளிவைப்பு

நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைத்து மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், தேர்தல் நடத்த பாதுகாப்பு கேட்டு விஷால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் ஆஜராகி, ‘தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு கோரிய மனு மீது தற்போது உத்தரவு பிறப்பிக்க வேண்டிய தேவை எழவில்லை’ என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, விசாரணையை 2 வாரத்திற்கு தள்ளி வைத்தார்.

Tags : Vishal ,governor , Actor Association Election, Governor, Vishal
× RELATED சொல்லிட்டாங்க…