வைகோ மீதான தேச துரோக வழக்கில் ஜூலை 5-ல் தீர்ப்பு: எம்.பி, எம்.எல்.ஏ சிறப்பு நீதிமன்றம் வழங்குகிறது

சென்னை: வைகோ மீதான தேச துரோக வழக்கில் ஜூலை 5ம் தேதி எம்.பி, எம்.எல்.ஏ சிறப்பு நீதிமன்றதில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. சென்னை ராணி சீதை மன்றத்தில் கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதம் ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசினார். அப்போது அவர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் பேசியதாக கூறி, ஆயிரம் விளக்கு போலீசார் தேச துரோக வழக்கு பதிவு செய்தனர்.  இந்த வழக்கில் வைகோ மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிக்கை நகலும் வழங்கப்பட்டிருந்தது. பின்னர் சாட்சி விசாரணைகள் தொடங்கயிருந்த நிலையில், எம்.பி, எம்.எல்.ஏகள் மீதான குற்ற வழக்குகளை விசாரிப்பதற்காக சென்னை கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து வழக்கு விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டது. அதில் வழக்கின் அரசு தரப்பு சாட்சிகளான போலீசார் உள்ளிட்ட 9 பேரிடம் வைகோ தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை நடத்தி முடித்தார். இதனைதொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையை வைத்து நீதிபதி கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த வைகோ நான் விடுதலை புலிகளை ஆதரித்து பேசினேன். இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆயுத உதவி செய்தது. ஆயிரகணக்கான கோடி பணம் உதவியது, அதனை வைத்து அவர்கள் உலகநாடுகளில் இருந்து ஆயுதங்களை வாங்கி, தமிழர்களை அழிக்க பயன்படுத்தினார்கள். ஒவ்வொரு தமிழர்களின் சாவுக்கு இலங்கை அரசு தான் பொறுப்பு.

 ராஜபக்சே சர்வதேச நீதிமன்றத்தில் நிற்க வைக்க வேண்டிய ஆள். பலரின் இறப்புக்கு இந்தியா தான் காரணம். எனவே இந்திய அரசு தன்னுடைய கொள்கைய மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பேசினேன். மேலும், இதே புத்தகம் 2008ம் ஆண்டு ஆங்கிலத்தில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் வெளியிடப்பட்டது. அதில் நான் பேசியதற்காக இதே குற்றச்சாடில் என் மீது வழக்கு போடப்பட்டது. ஆனால் அந்த வழக்கின் விசாரணையில் இருந்து நான் விடுதலை செய்யப்பட்டேன். அங்கு என்ன பேசினனோ, அதே தான் நான் அந்த புத்தகத்தை தமிழில் வெளியிட்ட போது 2009-ல் பேசினேன். என்று தன்மீதான குற்றத்திற்கு விளக்கமளித்தார். இதனை எல்லாம் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இருதரப்பு வக்கீல்களும் வாதிடுவதற்காக வழக்கு விசாரணை தள்ளிவைத்திருந்தார். அதன்படி வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வைகோ ஆஜராகிருந்தார். அரசு மற்றும் வைகோ தரப்பு வக்கீல்கள் வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குற்றச்சாட்டு பதிவு, அரசு சாட்சிகளிடம் விசாரணை, சாட்சியங்கள் அடிப்படையில் வைகோவிடம் கேள்வி, இருதரப்பு வக்கீல்கள் வாதம் என அனைத்து நடைமுறைகளும் முடிந்த நிலையில் வரும் ஜூலை 5ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க போவதாக தெரிவித்தார். தீர்ப்பு தேதி அறிவித்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Supreme Court of India , Vigo, in the case of treason, special court
× RELATED தமிழக போலீசாருக்கு சிலை கடத்தல்...