அரசு மருத்துவமனையில் பணிபுரிய திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் விஜய பாஸ்கர்

சென்னை: அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிய திருநங்கைகளுக்கு( மூன்றாம் பாலினம் ) பணி நியமன ஆணையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வழங்கினார். இதையடுத்து தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 24 மணி நேரமும் இயங்கும் மகப்பேறு மருத்துவ பிரிவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக 8 திருநங்கைகள் காவலர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதற்கான பணி நியமன ஆணையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தலைமை செயலகத்தில் வழங்கினார்.

இதை தொடர்ந்து சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புதிதாக புற்றுநோய் வலி நிவாரணம், மற்றும் ஆதரவு மையத்தை அமைச்சர் விஜய பாஸ்கர் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடன் பேசிய அவர் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டர் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு தண்ணீர் முறையாக விநியோகிக்கப்படுத்தலும் அரசு மருத்துவமனைகளில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுவதாலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு  இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : Vijaya Bhaskar ,Employment Guidelines for Transgender Service ,Government Hospital , Chennai, Government Hospital, Transgender, Employment Order, Minister Vijaya Bhaskar
× RELATED எபோலா, நிபா போல கொரோனாவும் வராது: ...