×

தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் வேலும் 2 நாட்கள் அனல்காற்று நீடிக்கும்: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் வேலும் 2 நாட்கள் அனல்காற்று நீடிக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறுவதாவது; சென்னை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் அனல் காற்று வீசும். மேலும் விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரியிலும் அனல் காற்று நீடிக்கும்.அனல் காற்று வீசும் என்பதால் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. குமரி கடல் மன்னார் வளைகுடா பகுதியில் காற்றின் வேகம் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வலுவான காற்று வீச வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருக்கிறது. கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 3 செ.மீ., பெரியகுளத்தில் ஒரு செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன் வெயிலும் கொளுத்தும் என்று தெரிவித்துள்ளது.


Tags : north ,valley ,Tamil Nadu , Vatamavattam, Solar Wind, Weather Center
× RELATED தென் தமிழகம், வட தமிழக மேற்கு...