அமெரிக்காவில் குற்ற சம்பவங்களை கண்காணிக்கும் பணியில் போலீசாருக்கு பதில் ரோபோக்கள்

கலிபோர்னியா: அமெரிக்காவில் குற்ற சம்பவங்களை கண்காணிக்கும் பணியில் போலீசாருக்கு பதில் ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் பொது இடங்களில் குற்ற செயல்கள் நடப்பதை கண்காணிக்கவும், தடுக்கவும் அமெரிக்காவில் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஹன்டின்டன் பூங்காவில் பொதுமக்கள் குற்ற செயல்களில் ஈடுபடுவதை கண்காணிக்கவும், தரவுகளை சேகரித்து போலிஸ் தலைமையகத்துக்கு அனுப்பி அதிரடி நடவடிக்கை எடுக்கவும் எச்.பி. ரோபோகாப் என்ற ரோபோ ஒன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து நான்கு புறமும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள இந்த மனித உயரத்திலான ரோபோவானது கொஞ்சம் வழிவிடுங்கள், மற்றும் இன்றைய தினம் நல்ல நாளாக அமையட்டும் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி பூங்காவுக்கு வருவோரை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதை தொடர்ந்து பூங்காவில் உள்ள ரோபோ போன்று கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள முக்கிய தெருக்களிலும் போலீஸ் ரோபோக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.


Tags : crime incidents ,United States , California, USA, Crime Stories, Monitoring Work, Police, Response, Robots
× RELATED தமிழக காவல்துறையில் 70 ஆயிரம்...