×

வேட்பாளர் குறித்த விவரங்கள் இணையத்தில் இடம்பெறுமா ?: மாநில தேர்தல் ஆணையம் பதில் அளிக்க ஆணை

மதுரை : உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யக் கோரிய வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர் பட்டியல், வேட்பாளர்களின்,வேட்பு மனுக்கள் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்படுவோரின் விவரங்களை தமிழக மாநில தேர்தல் ஆணையத்தின் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யக் கோரி பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது, வேட்பாளர்களின் விவரங்கள் எதுவும் வாக்காளர்களுக்கு தெரிவதில்லை என்று மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு வ வேட்பாளர் குறித்து வாக்காளர்கள் அறிந்து கொள்வது அடிப்படை உரியும் என்றும் மனுதாரர் தரப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதற்கு விளக்கம் அளித்த தமிழக அரசின் வழக்கறிஞர் அனைத்து தகவல்களையும் இணையத்தில் பதிவேற்றம் செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை ஜூலை 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Tags : Local Elections, Internet, Uploading, State Election Commission
× RELATED சொந்த ஊர் செல்லும் வாக்காளர்கள்...