×

குமரி அருகே 4 துறைமுகங்களில் தொடர் திருட்டு: கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்த கோரிக்கை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் துறைமுகங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் படகுகளின் இன்ஜின்கள் மற்றும் வலைகள் தொடர்ந்து திருடப்படுவதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சின்னமுட்டம், பெரியமுட்டம், குளச்சல், மற்றும் தேய்காய்ப்பட்டினம் ஆகிய நான்கு துறைமுகங்களில் 100க்கும் மேற்பட்ட இன்ஜின்கள் திருடப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் அங்கு கட்டுமரங்கள், உடைமைகள், இன்ஜின்கள் ஆகியவை திருடு போவதால் அந்த துறைமுகங்களில் கண்காணிப்பு  கேமராக்கள் பொறுத்த வேண்டும் என்றும், இதை தொடர்ந்து கடலோர காவல் படைகள் அங்கு நிறுத்த  வேண்டும், என்றும் கூறியுள்ளனர்.

இதையடுத்து அங்கு காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர். மேலும் மீனவர்களின் உடைமைகளை பாதுகாக்க கடலோர காவலர்களை நியமிப்பதுடன் கண்காணிப்பு கேமராக்களையும் பொறுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் மீனவர் சங்கங்கள் சார்பில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த போவதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : theft ,ports ,Kumari , Kumari, 4 ports, serial theft, camera, worry, demand
× RELATED குமரியில் டாரஸ் லாரியால் தொடரும் விபத்து