×

தண்ணீர் பற்றாக்குறை எதிரொலி: காஞ்சிபுரத்தில் தனியார் பள்ளிகளுக்கு இன்று முதல் அரைநாள் விடுமுறை அறிவிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டால் தனியார் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 1ம் வகுப்பில் இருந்து 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அரைநாள் மட்டும் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கழிவறையை பராமரிக்க தண்ணீர் இல்லாததால் அரைநாள் மட்டும் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. எங்கு திரும்பினாலும் வறட்சியான நிலையே காணப்படுகிறது. இதனால் தமிழகத்தின் அனைத்து கிராமங்கள் மட்டுமல்லாது, சென்னை உள்ளிட்ட நகர வாசிகளும் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அனைத்து ஐடி நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்னன. தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலை, தற்போது தமிழகத்தில் உள்ள பள்ளிகளிலும் எதிரொலித்துள்ளது. குறிப்பாக காஞ்சிபுரம் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில், இன்று முதல் அடுத்தமாதம் 5ம் தேதி வரை 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு அரை நாள் மட்டுமே பள்ளிகள் இயக்கப்படும் என அறிவிப்பு பலகையை வைத்துள்ளனர். இதையடுத்து 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னையில் உள்ள சில தனியார் பள்ளிகள் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக விடுமுறை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : holiday ,Kanchipuram ,schools , Water shortages, private schools, Kanchipuram, holidays
× RELATED ஏப்ரல் 2 முதல் தேர்வுகள் தொடக்கம் 1...