ஆந்திரா அருகே மனைவியை கொலை செய்த கணவன் போலீசில் சரண்

சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்த கணவன் போலீசில் சரணடைந்தார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வீலெர் தொகுதிக்கு உட்பட்ட கலக்கடவை சேர்ந்தவர் உசேன். இவரது மனைவி அம்மாஜியின் நடத்தைக் குறித்து உசேனுக்கு சந்தேகம் எழுந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கதிராயசேர்வு அருகே சென்று கொண்டிருந்த அம்மாஜியின் கழுத்தை உசேன் அறுத்துள்ளார். இதையடுத்து அவர் துண்டித்த தலையை கையில் எடுத்துக்கொண்டு நேரடியாக காவல் நிலையத்திற்கு சென்ற உசேன் அங்கு நடந்த விபரங்களை கூறி சரணடைந்தார்.

மேலும் இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி சடலத்தை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்து வெட்டப்பட்ட தலையுடன் கணவன் போலீசில் சரணடைந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Saran ,Andhra Pradesh , Chittoor, Andhra Pradesh, wife, killed her husband, police, Saran
× RELATED அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின்...