×

2020-ல் அமெரிக்க அதிபர் தேர்தல்: ஃபுளோரிடா மாகாணத்தில் இன்று பிரச்சாரத்தை தொடங்கினார் டொனால்ட் ட்ரம்ப்

வாஷிங்டன்: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அமேரிக்க அதிபர் தேர்தலிலுக்கான தேர்தல் பிரச்சாரத்தை டொனால்ட் ட்ரம்ப் தொடங்கியுள்ளார். அமெரிக்காவில் அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் ஆகும். இதன்படி, கடந்த 2016-ம் ஆண்டு  நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் போட்டியிட்டார். தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி  பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டிரம்ப் வெற்றிபெற்று, அமெரிக்காவின் 45-வது அதிபராக பதவியேற்றுக்கொண்டார். ஆனால் அவரது வெற்றியை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்கர்கள் அவருக்கு எதிராக பேரணிகளை நடத்தினர். அதோடு  அப்போது நடைபெற்ற தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாகவும் புகார் எழுந்தது.

இதற்கிடையே, சமீபத்தில், 2-வது முறையாக தான் அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக டிரம்ப் அறிவித்து இருந்தார். இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை டொனால்டு ட்ரம்ப் இன்று முறைப்படி,  ஃபுளோரிடா மாகாணம் ஓர்லண்டோவில் தொடங்கினார். பிரசாரத்தை அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த வருடம் 2020 நவம்பர் 3-ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : US ,Election ,Donald Trump ,province ,Florida ,campaign , US President Election, Florida State, Campaign, Donald Trump
× RELATED வரும் நவம்பரில் நடக்க உள்ள அமெரிக்க...