×

உலக அளவில் இந்திய இளைஞர்கள் தான் அதிக மனஅழுத்தத்தில் உள்ளனர்: உலக சுகாதார நிறுவனம் அறிக்கை

வாஷிங்டன்: உலக அளவில் இந்திய இளைஞர்கள் தான் அதிக மனஅழுத்தத்தில் இருக்கிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் 30 கோடிக்கும் அதிகமானவர்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மனஅழுத்தம் மற்றும் மனநோய் போன்ற பிரச்னைகள் குறித்து பெரிய அளவில் விவாதிக்கப்படாமல் இருக்கின்றன. இந்நிலையில் மனிதர்களைப் பாதிக்கும் நோய்களில் மனநோய் மிகக் கொடுமையானதாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

மனஅழுத்தம் குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,  சர்வதேச அளவில் அதிகபட்சமாக இந்திய மக்கள் தொகையில் 6.5 சதவீதத்தினர் மனஅழுத்தத்தில் உள்ளனர். ஒரு லட்சம் நபர்களுக்கு 10.9 நபர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். அதில் பெரும்பாலானவர்கள் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவிற்கு அடுத்தபடியாக சீனா, அமெரிக்கா, பிரேசில், இந்தோனேசியா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் மக்கள் அதிகளவில் மனஅழுத்தத்தில் இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இளைஞர்கள் அதிக அளவில் நோய் மற்றும் உடல், மன பாதிப்புகள் ஏற்படுவதற்கு மனஅழுத்தம் முக்கிய காரணமாக உள்ளது என்றும் இளைஞர்கள் மனஅழுத்தத்தில் இருப்பதை கண்டுகொள்ளாமல் இருந்தால் இளம் வயதில் முதுமை தோற்றம், உடல் மற்றும் மன ஆரோக்கியம் போன்ற பாதிப்புகளை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து இளைஞர்களை மீட்டெடுக்க விழிப்புணர்வு அவசியம் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : teenagers ,Indian ,World Health Organization , World, Indian Youth, High Depression, World Health Organization, Information
× RELATED படுக்கையில் இறந்து கிடந்த 2 வாலிபர்கள்