மெட்ரோ ரயில் நிலையங்களில் யோகா பயிற்சி

சென்னை: உலக யோகா தினத்தையொட்டி சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் 4 நாட்கள் தொடர் யோகா பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. 41 ஆண்டுகள் பயிற்சி அளிப்பதில் அனுபவம் பெற்ற சுத்தவெளிசபை ஏ.என்.தனசேகரன்  பயிற்சியளிக்கிறார். 20ம் தேதி காலை 6.30 மணிக்கு சென்ட்ரல், மாலை 5.30 மணிக்கு சைதாப்பேட்டை, 21ம் தேதி காலை 6.30 மணிக்கு திருமங்கலம், மாலை 5.30 மணிக்கு எழும்பூர், 22ம் தேதி காலை 6.30 மணிக்கு மண்ணடி, மாலை 5.30  மணிக்கு பரங்கிமலை, 23ம் தேதி காலை 6.30 மணிக்கு வடபழனி, மாலை 5.30 மணிக்கு அசோக் நகர் ஆகிய இடம், நேரங்களில் யோகா பயிற்சி நடக்கிறது. இதில் பொதுமக்கள் பங்கேற்கலாம். இவ்வாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Tags : stations , Metro, Railway Stations, Yoga Practice
× RELATED சுகப்பிரசவத்திற்கு அரசு...