×

கூவம் ஆற்றில் வாலிபர் சடலம் மீட்பு

சென்னை: சிந்தாதிரிப்பேட்டை அருகே உள்ள கூவம் ஆற்றில் நேற்று மதியம் அடையாளம் தெரியாத வாலிபர் சடலம் மிதந்தது. தகவலறிந்து வந்த திருவல்லிக்கேணி போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சடலத்தை கைப்பற்றி,  பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த நபர் ஜீவன் பேட்ரின் (36) என்பது தெரியவந்தது. இவர் எப்படி இறந்தார்?, யாரேனும் அடித்து கொன்று கூவத்தில் வீசினார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : recovery ,river , Cooam River, Plaintiff, corpse, recovery
× RELATED ராஜஸ்தானில் வேறு மருத்துவமனைக்கு...