நெருக்கமாக பழகியபோது எடுத்த வீடியோவை வெளியிடுவதாக மிரட்டல்: தனியார் கல்லூரி ஊழியர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்

சென்னை: திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி நாங்கள் நெருக்கமாக இருந்தபோது எடுத்த  ஆபாச படம் மற்றும் வீடியோவை காட்டி மிரட்டி வருவதாக இளம் விதவை ஒருவர், தனியார் கல்லூரி ஊழியர் மீது நுங்கம்பாக்கம்  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.சேலம் ஆசாரிபாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் ஜீவா (30). இவர், கணவனை இழந்து தனியாக வசித்து வருகிறார். ஜீவா சேலத்தில் உள்ள தனியார் மழலை பள்ளி ஒன்றில் ஆயாவாக வேலை செய்து வந்தார். அப்போது அதே  பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்த சார்லஸ் (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஜீவா கணவனை பிரிந்து வாழ்ந்து வந்ததால் சார்லஸ் உடன் நெருக்கம் ஏற்பட்டது. இந்த ெநருக்கம் பின்னர் காதலாக மாறி பல இடங்களில் சுற்றி  வந்துள்ளனர்.இருவரின் காதல் விவகாரம் ஜீவா வீட்டிற்கு தெரியவந்தது. பிறகு ஜீவாவை கடுமையாக கண்டித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தனது காதலன் சார்லசுடன் சென்னைக்கு வந்து விட்டார். நுங்கம்பாக்கத்தில் வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து  கடந்த 2 ஆண்டுகளாக கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்தனர். தற்போது சார்லஸ் நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் கிளார்க்காக வேலை செய்து வருகிறார்.

இதற்கிடையே சில மாதங்களாக சார்லஸ் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. இதுகுறித்து, ஜீவா கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஜீவா தன்னை திருமணம் செய்து கொள் என்று கேட்டுள்ளார். அதற்கு  சார்லஸ் இருவரும் உல்லாசமாக இருக்கும் போது எடுத்த படம் மற்றும் வீடியோவை காட்டி திருமணம் செய்ய முடியாது என்று மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து தொல்லை கொடுத்தால் உன் படம் மற்றும் வீடியோவை  சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துவிடுவேன் என மிரட்டி உள்ளார்.எனவே, அதிர்ச்சியடைந்த ஜீவா தனது காதல் கணவன் மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் தன்னுடன் நெருக்கமாக இருந்த படம் மற்றும் வீடியோவை காட்டி தன்னை திருமணம் செய்யாமல் மிரட்டி வருவதாக பரபரப்பு புகார் அளித்தார்.சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கப்பட்ட இடம் சேலம் என்பதால் புகாரின்படி சிஎஸ்ஆர் மட்டும் வழங்கினர். பின்னர் இந்த வழக்கு தொடர்பாக சேலம் காவல் துறையில் புகார் அளிக்கும் படி இளம்பெண்ணிடம் போலீசார் தெரிவித்து அனுப்பி வைத்தனர். ஆனால் போலீஸ் கமிஷனர் யார் புகார் அளித்தாலும், அந்த புகாரை பெற்று உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் காதல் கணவன் மீது புகார் அளித்த பெண்ணை சேலத்திற்கு சென்று புகார் அளிக்கும்படி திருப்பி அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : teenager ,college , Threatens, publish,close-up video
× RELATED அஜீத் வீடியோ வெளியிட்ட போலீஸ்