கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தகவல் சர்ச்சைக்குரிய 90 லட்சம் வீடியோ யூ டியூப்பில் இருந்து அதிரடி நீக்கம்

வாஷிங்டன்: வெறுக்கத்தக்க பதிவுகளை நீக்கும் கொள்கையின் அடிப்படையில், கடந்த 3 மாதங்களில் சர்ச்சைக்குரிய 90 லட்சம் வீடியோக்கள் `யூ டியூப்’பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) சுந்தர் பிச்சை  தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப் பெரியதும் அதிக பயனாளர்களை கொண்டதுமான கூகுள் நிறுவனம் பிரபலமான யூ டியூப் சேனலை விலைக்கு வாங்கியது. இதில் நாடு, மொழி, மதம், இனம் உள்ளிட்ட பிரிவுகளில் வெறுப்புணர்வை தூண்டும் சர்ச்சைக்குரிய  கருத்துகள் பதிவிடப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, இவற்றை நீக்கும் நடவடிக்கையில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள பிரபல தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அளித்த பேட்டியின் விவரம் பின்வருமாறு:யூ டியூப் சமூக வலைதளத்தில் கடந்த 3 மாதங்களில் மட்டும் வெறுக்கத்தக்க பதிவுகளை நீக்கும் கொள்கையின் அடிப்படையில் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட சர்ச்சைக்குரிய, பாதிப்புகளை ஏற்படுத்தும்  வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன.

ஆனால்,  இன்னும் நீக்கப்பட வேண்டியவை ஏராளமாக உள்ளன. இதற்கான முயற்சிகள் தொடர்கின்றன. நவீன தொழில்நுட்ப உதவியுடன் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 99 சதவீதம் சரி செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஒரு சதவீதத்துக்கும்  மிகக் குறைவான அளவுக்கு இதனை நிவர்த்தி செய்ய முயற்சிக்கிறோம். கிரெடிட் கார்டு போன்ற பெரியளவிலான அமைப்பு முறைகளில் மோசடிகள் நடக்கின்றன. வாடிக்கையாளர்களின் தகவல்கள் குறித்த ரகசியத் தன்மை பெரும் பிரச்னையாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>