×

நாக்-அவுட் சுற்றில் நார்வே

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் பிபா மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் நாக்-அவுட் சுற்றில் விளையாட நார்வே அணி தகுதி பெற்றுள்ளது. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள நார்வே அணி தனது 3வது மற்றும் கடைசி லீக்  ஆட்டத்தில் தென் கொரியா அணியுடன் மோதியது. அந்த அணியின் கிரகாம் ஹான்சன் 4வது நிமிடத்திலும், இசபெல் ஹெர்லவ்சன் 50வது நிமிடத்திலும் பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தனர். தென் கொரியா சார்பில் யியோ மின்ஜி 78வது  நிமிடத்தில் ஆறுதல் கோல் போட்டார். நார்வே அணி 2- 1 என்ற கோல் கணக்கில் போராடி வென்று ஏ பிரிவில் 6 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்தது. இந்த பிரிவில் பிரான்ஸ் (9), நார்வே (6) அணிகள் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில்  விளையாட தகுதி பெற்றுள்ளன.



Tags : Norway ,round , Norway , knock-out ,round
× RELATED ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி...