தென் ஆப்ரிக்காவுடன் இன்று மோதல் முதலிடத்துக்கு முன்னேறுமா நியூசிலாந்து?

பர்மிங்காம்: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில், தென் ஆப்ரிக்கா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.நியூசிலாந்து அணி விளையாடிய முதல் 3 லீக் ஆட்டங்களில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளை வீழ்த்தியது. இந்தியா - நியூசிலாந்து அணிகளிடையே நடக்க இருந்த போட்டி கனமழை காரணமாக கைவிடப்பட்டதை அடுத்து,  நியூசிலாந்து 7 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், தென் ஆப்ரிக்க அணியுடன் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் வென்று முதலிடத்துக்கு முன்னேறும் முனைப்புடன் நியூசிலாந்து  களமிறங்குகிறது. நியூசிலாந்து அணியின் பேட்டிங்கை விட பந்துவீச்சு பலம் வாய்ந்ததாக உள்ளது. போல்ட், பெர்குசன், ஹென்றி, நீஷம், கிராண்ட்ஹோம், சான்ட்னர் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி அசத்தி வருகின்றனர்.

பேட்டிங்கிலும் கோலின் மன்றோ, கப்தில், கேப்டன் வில்லியம்சன், டெய்லர், லாதம், நீஷம் என அதிரடி வீரர்கள் அணிவகுக்கின்றனர். தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்து நியூசிலாந்து வீரர்கள் உற்சாகமாக உள்ள நிலையில்,  தடுமாற்றத்துடன் விளையாடி வரும் தென் ஆப்ரிக்க அணி கட்டாய வெற்றி என்ற நெருக்கடியில் சிக்கியுள்ளது. அந்த அணி 5 லீக் ஆட்டத்தில் 3 புள்ளி மட்டுமே பெற்று (1 வெற்றி, 3 தோல்வி, 1ரத்து) 8வது இடத்தில் பின் தங்கியுள்ளதால், அரை  இறுதிக்கு முன்னேற எஞ்சியுள்ள எல்லா ஆட்டத்திலும் வென்றாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிரென்ட் போல்ட், லோக்கி பெர்குசன், மேட் ஹென்றி, கோலின் மன்றோ, ஹென்றி நிகோல்ஸ், ஈஷ் சோதி, ராஸ் டெய்லர், டாம் பிளண்டெல், கோலின் கிராண்ட்ஹோம், மார்டின் கப்தில், டாம்  லாதம், ஜிம்மி நீஷம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தீ.தென் ஆப்ரிக்கா: பேப் டு பிளெஸ்ஸி (கேப்டன்), குவின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), இம்ரான் தாஹிர், டேவிட் மில்லர், லுங்கி என்ஜிடி, டுவைன் பிரிடோரியஸ், டாப்ரைஸ் ஷம்சி, ராஸி வான்டெர் டுஸன், ஹாஷிம் அம்லா, ஜீன் பால் டுமினி,  எய்டன் மார்க்ராம், கிறிஸ் மோரிஸ், அண்டில் பெலுக்வாயோ, காகிசோ ரபாடா, பியூரன் ஹெண்ட்ரிக்ஸ்.Tags : New Zealand ,confrontation ,South Africa , New Zealand,clash , South Africa?
× RELATED நியூசிலாந்து டூர்: இந்திய அணி இன்று தேர்வு