×

‘சிப்காட்’ ஆன்லைன் போர்ட்டல் அறிமுகம்

சென்னை: சிப்காட் வெளியிட்டுள்ள அறிக்கை: சிப்காட், www.sipcot.in என்ற புதிய ஆன்லைன் போர்ட்டலை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் அனைத்து சேவைகளையும் ஆன்லைனில் பெற முடியும். குறிப்பாக நில ஒதுக்கீட்டிற்கான விண்ணப்பம், சலுகைகள் பெற விண்ணப்பித்தல், என்ஓசி சான்றிதழ் பெறுவதற்கு, கட்டணம் செலுத்துவதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த போர்ட்டலை பயன்படுத்தும் விண்ணப்பதாரர் முதலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பிறகு விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். தேவையான சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும். பிறகு விண்ணப்பப் படிவத்தை தாக்கல் செய்தவுடன், அதற்கான ஒப்புகை பதிவுச்சீட்டு விண்ணப்பதாரருக்கு அனுப்பப்படும். மேலும் கூடுதல் வசதியாக தொழிற்பூங்காவில் நிலம் இருப்பு, அதன்விலை, பிளாட் இருப்பு உள்ளிட்ட விபரங்கள் இருக்கும். இதை தொழிற்துறையினர் பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.



Tags : Introduction , 'SIPCOT' online portal launched
× RELATED பெண்களின் உடல்நலத்திற்காக...