×

விதியை மீறி வெளிநாட்டு நிதியுதவி பெற்றதாக ஆனந்த் குரோவர் தொண்டு நிறுவனம் மீது சிபிஐ வழக்கு

புதுடெல்லி: விதியை மீறி வெளிநாட்டில் இருந்து நிதியுதவி பெற்றதாக பிரபல வக்கீல் ஆனந்த் குரோவர் மற்றும் மும்பையில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனம் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. டெல்லியை சேர்ந்த வக்கீல் ஆனந்த் குரோவர். இவர் வக்கீல்கள் அமைப்பின் தலைவராகவும் உள்ளார். இவர் மும்பையில் தொண்டு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவரது மனைவி இந்திரா ஜெய்சிங், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்தவர். இந்த நிலையில் விதியை மீறி தொண்டு நிறுவனம் மற்றும் வக்கீல்கள் அமைப்புக்கு வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெற்றுள்ளதாக உள்துறை அமைச்சகம் குரோவர் மீது குற்றம்சாட்டியது.

அதில், உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெறாமல் கடந்த 2009 முதல் 2014ம் ஆண்டில் அப்போதைய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த இந்திரா ஜெய்சிங் தனது சொலிசிட்டர் ஜெனரல் அதிகாரத்தை பயன்படுத்தி அவரது கணவர் நிர்வாகியாக உள்ள வக்கீல்கள் அமைப்புக்கு ₹96.60 லட்சத்தை அன்பளிப்பாக பெற்றுள்ளதாகவும், அந்த தொண்டு நிறுவனத்தின் பதிவேடு ஆவணத்தை கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி 19 முதல் 23ம் ேததி வரை ஆய்வு செய்ததன் அடிப்படையில் விதிமீறலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது’ என்றும் கூறப்பட்டுள்ளது. இதை அடிப்படையாக கொண்டு வக்கீல் ஆனந்த் குரோவர் மீதும் அவரது ெதாண்டு நிறுவனம் மற்றும் வக்கீல் அமைப்பு மீதும் தற்போது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

Tags : CBI ,charity ,Anand Grover , CBI,files,case agains,Anand Grover
× RELATED தீ தொண்டு நாள் வார விழா