×

200 கோடி வாடிக்கையாளர்கள் பயன்பாட்டுக்காக தனியாக டிஜிட்டல் கரன்சி; பேஸ்புக் திட்டம்

சான்பிரான்சிஸ்கோ: பேஸ்புக் தனது 200 கோடி வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் வகையில், தனக்கென புதிய டிஜிட்டல் கரன்சியை விரைவில் அறிமுகம் செய்கிறது. இது தொடர்பாக பேஸ்புக் முதன்மை நிர்வாகி டேவிட் மார்கஸ் கூறியதாவது:  உலகளவில் பயன்படுத்தும் வகையில் பிட்காயினை போன்று டிஜிட்டல் கரன்சியை விரைவில் அறிமுகம் செய்ய பேஸ்புக் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் உலகின் எந்த மூலையில் உள்ளவருக்கும் பணத்தை எளிதாக அனுப்பலாம். இதற்காக, தற்போது வெஸ்டர்ன் யூனியன் நிறுவனம் பணத்தை அந்தந்த நாடுகளின் பணமாக மாற்ற கமிஷன் வசூலிக்கிறது.

ஆனால், பேஸ்புக் புதிய கரன்சி அறிமுகம் செய்யப்பட்டால் இதுபோன்ற எந்த கமிஷனும் கொடுக்க வேண்டியிருக்காது. இந்த கரன்சிக்கு லிப்ரா என பெயரிடப்பட்டுள்ளது. இதற்காக பேபால், உபர், ஸ்போடிபை, விசா மற்றும் மாஸ்டர் கார்டு உள்ளிட்ட 27 நிறுவனத்தின் நிதியுதவியுடன் புதிய கரன்சியை உருவாக்கி வருகிறோம். இதன் மூலம் வங்கி கணக்கு இல்லாதவர்கள் கூட ஆன்லைன் வர்த்தகத்தை எளிதாக மேற்கொள்ள முடியும். மேலும் சமூக வலைதளங்களில் செய்யப்படும் விளம்பர பொருட்களை பெற இந்த கரன்சியை பயன்படுத்தலாம் என்றார்.

Tags : customers , 200 crore customers,use digital,currency alone, Facebook program
× RELATED போலி ஆவணங்கள் தயாரித்து 3...