×

திமுக எம்எல்ஏ மீது தொடரப்பட்ட வழக்கில் ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை: சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த எஸ்.பார்த்திபன், கிண்டி போலீஸ் நிலையத்தில் கடந்த மே மாதம் புகார் அளித்தார். அதில், அரசு நிலத்தை மா.சுப்பிரமணியன் அபகரித்ததாக கூறப்பட்டிருந்தது. புகாரின் அடிப்படையில், மா.சுப்பிரமணியன், காஞ்சனா உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க கோரி, மா.சுப்பிரமணியனும், காஞ்சனாவும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன், அரசு சார்பில் தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் ஆஜராகினர். மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனு மீதான தீர்ப்பை தள்ளிவைத்தார்.

Tags : DMK MLA , Postponement , judgment , ICTOR, proceedings against DMK MLA
× RELATED பல்லடம் வாக்குச்சாவடியில் திமுக எம்எல்ஏ தர்ணா