×

தோள்பட்டை இறங்கியது நடிகர் சர்வானந்துக்கு அறுவை சிகிச்சை

சென்னை: எங்கேயும்  எப்போதும், காதல்னா சும்மா இல்லை, நாளை நமதே, ஜேகே எனும் நண்பனின்  வாழ்க்கை படங்களில் நடித்திருப்பவர் சர்வானந்த். தெலுங்கில பல்வேறு  படங்களில் நடித்து வருகிறார். தமிழில் விஜய்சேதுபதி, திரிஷா நடித்த 96 படம்  தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் விஜய்சேதுபதி வேடத்தை சர்வானந்த் ஏற்று  நடிக்கிறார். தாய்லாந்து சென்ற சர்வானந்த் படத்திற்காக ஸ்கை டைவிங்  பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அப்போது அவரது தோள்பட்டையில் பாதிப்பு  ஏற்பட்டு தோள்பட்டை இறங்கியது. இதனால் அவதிப்பட்ட  சர்வானந்த் உடனடியாக ஐதராபாத் திரும்பி வந்தார். மருத்துவமனைக்கு சென்ற  அவரை டாக்டர்கள் பரிசோதித்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்  என்றனர். இதையடுத்து சர்வானந்துக்கு நேற்றுமுன்தினம் 7 மணி நேரம் அறுவை சிகிச்சை  நடந்தது. அடுத்த சில வாரங்களுக்கு சர்வானந்த் ஓய்வில் இருக்க  வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுரை கூறி உள்ளனர்.

Tags : actor ,Survant Surgery , Actor Sarvanand,surgery, shoulder
× RELATED நடிகர் சங்கத்துக்கு நடிகர் விஜய் ரூ.1 கோடி நிதி