×

காட்சி பொருளான குப்பை தொட்டிகள்

ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் யூனியனில் ஏ.ஆர்.மங்கலம் பஞ்சாயத்திற்கு உட்பட்டு புத்தனேந்தல், கொண்னக்குடி, குலநாத்தி, பகவதி மங்கலம், வாகைக் குடிகற்களத்தூர் குமுளியேந்தல், கண்ணுகுடி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. ஏ.ஆர்.மங்கலம் ஊராட்சிக்கு திட கழிவு மேலாண்மை திட்டத்தில் 10க்கும் மேற்பட்ட குப்பை ெதாட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த குப்பை தொட்டிகள் நீண்ட காலமாக பயன்பாடின்றி, ஊராட்சி மன்ற வளாகம் முன்பு காட்சிப் பொருளாக உள்ளன.

இந்த குப்பை தொட்டிகள் திறந்தவௌியில் கிடப்பதால் மழை மற்றும் வெயிலுக்கு சேதமடைந்து வருகின்றன. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டும், காணாமல் உள்ளனர். இதனால் அரசு பணம் விரயமாகி வருகிறது. அரசு பணம் விரயமாவதை தடுக்க குப்பைத்தொட்டிகளை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : RS Mangalam, Garbage Bins
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...