உலகக்கோப்பை கிரிக்கெட்; இயான் மோர்கன் அதிரடி: ஆப்கானிஸ்தான் அணிக்கு 398 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து

மான்செஸ்டர்: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 398 ரன்களை வெற்றி இலக்காக இங்கிலாந்து அணி நிர்ணயித்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணியின் கேப்டன் 58 பந்துகளில் சதம் அடித்தார். பின்னர் 148 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். மேலும் ஜானி பேர்ஸ்டோவ் 90 ரங்களும், ஜோ ரூட் 88 ரங்களும் எடுத்தனர் இதனையடுத்து 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்க உள்ளது.


Tags : England ,World Cup Cricket ,victory ,Ian Morgan Stuart , World Cup Cricket, Ian Morgan, Afghanistan, England
× RELATED தென் ஆப்ரிக்காவுடன் 3வது டெஸ்ட் இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி