×

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்பியாக உறுதிமொழி ஏற்பு: பாஜகவை பின்பற்றி ஜெய்ஹிந்த் என்று முழங்கியதால் சர்ச்சை

டெல்லி: தேனி மக்களவை உறுப்பினராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் ஜெய்ஹிந்த் என்ற இந்தி வாசகத்தை கூறி உறுதிமொழி ஏற்றது பெரும் சர்ச்சையாகி உள்ளது. தமிழகத்தில் இருந்து வெற்றி பெற்ற அதிமுகவின் ஒரே உறுப்பினரான ரவீந்திரநாத்குமார் நாடாளுமன்றத்தில் இன்று உறுதிமொழி ஏற்றார். அவருக்கு முன்னாள் உறுதிமொழி ஏற்ற தமிழக உறுப்பினர்கள் அனைவரும் தமிழ் வாழ்க என்று கூறி உறுதிமொழி ஏற்பை நிறைவு செய்த நிலையில் ரவீந்திரநாத் மட்டும் ஜெய்ஹிந்த் என்ற இந்தி வாசகத்தை கூறி நிறைவு செய்தார்.

ரவீந்திரநாத் ஜெய்ஹிந்த் என்று கூறியதை வரவேற்கும் வகையில் பாஜக உறுப்பினர்கள் மேஜையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஏனென்றால் பாரதிய ஜனதா உறுப்பினர்கள் மட்டுமே ஜெய்ஹிந்த் என்ற வாசகத்துடன் உறுதிமொழியை நிறைவு செய்வது வழக்கம். ஆனால் தமிழகத்தில் இருந்து அதிமுகவின் பிரதிநிதியாக சென்ற ரவீந்திரநாத் பாரதிய ஜனதாவை பின்பற்றி உறுதிமொழி ஏற்றது பெரும் சர்ச்சையாகி உள்ளது. அவர் பாஜக உறுப்பினராக கருதி செயல்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.


Tags : Raveendranath ,OBS ,Jaihind , Ravindranath MP, BJP, Jaihind, Controversy
× RELATED மக்களவை தேர்தலில் ஓபிஎஸ் அணி...