ஜெயலலிதாவின் நினைவிட கட்டிட பணிகள் விரைவில் நிறைவு: முதல்வர் எடப்பாடி

சென்னை: 5 மாதத்திற்குள் ஜெயலலிதாவின் நினைவிட கட்டிட பணிகள் நிறைவடையும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டிட தமிழக அரசு ரூ.50.80 கோடி ஒதுக்கியுள்ளது. புதிய வடிவமைப்புடன் கட்டிடப்பணிகள் நடைபெறுவதால் காலதாமதம் ஆவதாக முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். மேலும் தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க  உள்ளாட்சித்துறை அமைச்சர் உரிய நடவடிக்கையை எடுத்து வருவதாகவும் கூறினார்.

× RELATED றெக்கை கட்டி பறக்கும் தங்கத்தின்...