×

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறியுடன் கூலி தொழிலாளி ஒருவர் அனுமதி

புதுச்சேரி : புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறியுடன் கூலி தொழிலாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதன் அடைப்படையில் அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பூவிழுந்த நல்லூரைச் சேர்ந்தவர் ராமலிங்கம், இவர் கூலி தொழிலாளி ஆவர். இவர் கேரளாவில் வேலை பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவரது சொந்த ஊரான பூவிழுந்த நல்லூருக்கு வந்து கடலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நிபா வைரஸ் தொற்று இருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகித்தனர். இதனையடுத்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மேல்சிகிச்சைக்காக கூலி தொழிலாளி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து அவர் தனி பிரிவில் வைக்கப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். மேலும் அவருக்கு நிபா வைரஸ் உள்ளதா என்பதை உறுதி செய்ய அவரது ரத்த மாதிரிகள்  சேகரிக்கப்பட்டு புனே மருத்துவ ஆராய்ச்சிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதன் முடிவுகள் கிடைக்க பெற்ற பிறகே அவருக்கு நிபா வைரஸ் தொற்று உள்ளதா என்பது தெரிய வரும். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரளாவில் பணியாற்றிய கடலூர் மாவட்ட கூலி தொழிலாளி ஒருவர் நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறியுடன் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் பின்னர் அவருக்கு நிபா வைரஸ் இல்லை என உறுதி செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.  


Tags : laborer ,Jipmer Hospital ,Puducherry , Jibmer, Hospital, Puducherry, Virus, Fever, Nipa, Coolie, Worker
× RELATED கிராம கூட்டத்தில் தொழிலாளி கொலை: முன்னாள் நாட்டாமை கைது