×

தமிழகத்தில் நீர் மேலாண்மைக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.. உயர்நீதிமன்றம் கண்டனம்

சென்னை : தமிழகத்தில் நீர் மேலாண்மைக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சென்னையில் குடிநீர்பிரச்சனையை போக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. குடிநீர் பிரச்னைக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் ஏரிகளை தூர்வாறவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் எடுத்த நடவடிக்கைகள் என்ன?..இது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தெரிவிக்கும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.மழை நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை என்ன?..  இந்த வழக்கில் தமிழக அரசு இன்று பதில் மனு தாக்கல செய்துள்ளது. அந்த மனுவில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பருவமழை பொய்த்ததால் சென்னைக்கு நாளொன்றுக்கு வழங்கும் தண்ணீர் அளவு குறைந்துள்ளது. மீஞ்சூர், நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தால் நாளொன்றுக்கு 180 மில்லியன். லி. நீர் வழங்கப்படுகிறது. கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள் அமைப்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.  தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ஆழ்துளை கிணறு அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்துவருகிறோம் என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


Tags : Tamil Nadu ,High Court , No action , water management , Tamil Nadu
× RELATED தமிழகம் முழுவதும் கல்வி...