×

மக்களவையில் ஓங்கி ஒலித்த தமிழ் குரல் : தமிழக எம்.பிக்கள் தாய் மொழியில் பதவியேற்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவைக்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக எம்.பி.கள் தமிழில் உறுதிமொழி ஏற்றனர். மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதி மாறன் “தமிழ் வாழ்க” என்ற கூறி பதவியேற்றுக்கொண்டார்.  தென்சென்னை தொகுதி திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன், வடசென்னை தொகுதி திமுக டாக்டர் கலாநிதி வீராசாமி, திருவள்ளுவர் தொகுதி ஜெயக்குமார் ஆகியோர் பதவியேற்றனர்.

17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர்

மக்களவை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றிபெற்று, மத்தியில் தொடர்ந்து 2வது முறையாக ஆட்சி அமைத்தது. அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை ஜூன் 17ம் தேதி கூட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மக்களவை தேர்தல் முடிந்த பிறகு நாடாளுமன்றத்தின் (17வது மக்களவை) முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. தற்காலிக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட வீரேந்திர குமாருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ராஷ்டிரபதி பவனில் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதையடுத்து, புதிய எம்பிக்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் பிரதமர் நரேந்திர மோடி எம்பியாக பதவியேற்றுக் கொண்டார். பின்னர், அவைத் தலைவர்களான கே.சுரேஷ் (காங்.), பிரிஜ்பூஷன் சரண் சிங் (பிஜேடி), பி.மெதாப் (பாஜ) ஆகியோர் பதவியேற்றனர். அவர்களைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி உள்ளிட்டோர் பதவி ஏற்றுக் கொண்டனர்.நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் எம்பிக்கள் ஒவ்வொருவரும் தங்களின் விருப்பமான மற்றும் தாய்மொழியில் பதவி ஏற்றது குறிப்பிடத்தக்கது. இறுதியில் ஒடிசா மாநில எம்பிக்கள் பதவியேற்றதை தொடர்ந்து, முதல் நாள் கூட்டத் தொடர் நிறைவடைந்தது.

தமிழக எம்பிக்கள் உறுதி மொழி ஏற்பு

இந்நிலையில் 2ம் நாளான தமிழக எம்பிக்கள் பதவி ஏற்றனர். நாடாளுமன்ற மக்களவைக்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக எம்.பி.கள் தமிழில் உறுதிமொழி ஏற்றனர். மக்களவை பொதுச் செயலாளர் சினேகலதா ஸ்ரீவஸ்தவா, எம்பிக்கள் ஒவ்வொருவருக்கும் அழைப்பு விடுத்தார். இவர்களுக்கு இடைக்கால சபாநாயகர் வீரேந்திரகுமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

1 வடசென்னை தொகுதி திமுக எம்.பி.டாக்டர் கலாநிதி வீராசாமி பதவியேற்றார்

2 தென்சென்னை தொகுதி திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பதவியேற்றார்

3 மத்திய சென்னை தொகுதி திமுக எம்.பி. தயாநிதி மாறன் “தமிழ் வாழ்க” என்ற கூறி பதவியேற்றுக்கொண்டார்.

4 ஸ்ரீபெரும்புதூர்  தொகுதி திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பதவியேற்றார்

5 காஞ்சிபுரம்  தொகுதி திமுக எம்.பி. செல்வம் பதவியேற்றார்

6 அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் பதவியேற்றார்

7 கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. டாக்டர் செல்லக்குமார்(காங்கிரஸ்)பதவியேற்றார்

8 தருமபுரி தொகுதி எம்.பி. செந்தில்குமார் (திமுக)பதவியேற்றார்

9 திருவண்ணாமலை தொகுதி  எம்.பி. சி.என்.அண்ணாதுரை(திமுக) பதவியேற்றார்

10 ஆரணி தொகுதி எம்.பி. விஷ்ணுபிரசாத்(காங்கிரஸ்) பதவியேற்றார்

11 விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார்(விடுதலை சிறுத்தைகள் ) பதவியேற்றார்

12 கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி. கவுதம சிகாமணி(திமுக)  பதவியேற்றார்

13 சேலம் தொகுதி எம்.பி. பார்த்திபன்(திமுக) பதவியேற்றார்

14 நாமக்கல் தொகுதி  எம்.பி. சின்ராஜ்(கோ.ம.தே.க) பதவியேற்றார்

15 ஈரோடு தொகுதி எம்.பி. கணேச மூர்த்தி(மதிமுக) பதவியேற்றுக் கொண்டார்

16 திருப்பூர் எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார் சுப்புராயன்(இந்திய கம்யூனிஸ்ட்)

17 நீலகிரி தொகுதி  எம்.பி.யாக தேர்வான ஆ.ராசா(திமுக) பதவியேற்பு

18 கோவை தொகுதி எம்.பி.யாக பதவியேற்றார் பி.ஆர்.நடராஜன்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)

19 பொள்ளாச்சி தொகுதி எம்.பி.யாக கே.சண்முக சுந்தரம்(திமுக) பதவியேற்றார்

20 திண்டுக்கல் எம்.பி.யாக பதவியேற்றார் திமுகவின் வேலுசாமி

21 கரூர் தொகுதி  எம்.பி.யாக ஜோதிமணி(காங்கிரஸ்) பதவியேற்பு

22 மயிலாடுதுறை எம்.பி.யாக ராமலிங்கம்(திமுக) பதவியேற்றுக் கொண்டார்

23 நாகப்பட்டினம் எம்.பி.யாக பதவியேற்றார் எம்.செல்வராஜ்(இந்திய கம்யூனிஸ்ட்)

24 தஞ்சை தொகுதி எம்.பி.யாக எஸ்.எஸ். பழனி மாணிக்கம்(திமுக) பதவியேற்பு

25 சிவகங்கை எம்.பி.யாக பதவியேற்றார் கார்த்தி ப.சிதம்பரம்(காங்கிரஸ்)

26 ராமநாதபுரம் எம்.பி.யாக நவாஸ் கனி(முஸ்லீம் லீக்) பதவியேற்பு

27 ‘வாழ்க தமிழ்; வாழ்க பெரியார்’ என தூத்துக்குடி எம்பியாக பதவியேற்றார் கனிமொழி(திமுக).  

28 சிதம்பரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி.யாக திருமாவளவன் பதவியேற்பு

29 தென்காசி எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார் தனுஷ் எம்.குமார்(திமுக)

30 நெல்லை தொகுதியின் எம்.பி.யாக ஞான திரவியம்திமுக) பதவியேற்பு

31 ‘காமராஜர் வாழ்க; ராஜீவ்காந்தி வாழ்க’ எனக்கூறி கன்னியாகுமரி எம்பியாக பதவியேற்றார் வசந்த்குமார் (திமுக)

32 தமிழ் வாழ்க, மார்க்சியம் வாழ்க’ என மதுரை எம்பியாக பதவியேற்றார் சு.வெங்கடேசன்(மார்க்சிஸ்ட்)

33 ‘வாழ்க எம்ஜிஆர், ஜெயலலிதா.. வந்தே மாதரம்’ என கூறி தேனி எம்பியாக பதவியேற்றார் அதிமுக ரவீந்திரநாத்

34 தமிழ் வாழ்க, இந்தியாவும் வாழ்க என்று கூறி பெரம்பலூர் எம்பியாக பதவியேற்ற பாரிவேந்தர்(ஐஜேகே).

35. விருதுநகர் தொகுதி எம்பியாக மாணிக்கம் தாக்கூர்(காங்கிரஸ்) [பதவியேற்பு

36 திருச்சி தொகுதியில் எம்பியாக திருநாவுக்கரசர்(காங்கிரஸ்) பதவியேற்பு

37 கடலூர் தொகுதி எம்பியாக ரமேஷ்(திமுக) பதவியேற்பு

38.திருவள்ளூர் (தனி) தொகுதி எம்பியாக கே. ஜெயக்குமார் (காங்கிரஸ்) பதவி ஏற்பு

39. புதுச்சேரி தொகுதி எம்பியாக வைத்திலிங்கம்(திமுக) பதவியேற்பு



Tags : Tamil ,MPs ,Thai , Central Chennai, DMK, MP, Tamil Nadu Thangappandian
× RELATED திருத்துறைப்பூண்டியில் சமூக மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு