×

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு... வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி: மன்னார்குடி அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரி வித்து விவசாயிகள் நடவு வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம், கூத்தாநல்லூர் ஆகிய 5 ஒன்றியங்களில் 16 ஊராட்சிகளில் ஹைட்ரோ காரபன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் 5 ஒன்றியங்களிலும் விவசாயிகள் திரண்டு தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி மன்னார்குடி அருகே ஆலங்கோட்டை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், பெண்கள், விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் நடவு வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களின் உயிரை கொடுத்தேனும் நாசகாரத் திட்டத்தை தடுத்து நிறுத்துவோம் என சூளுரைத்தனர்.

Tags : field , Hydrocarbon
× RELATED மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவால்...