×

காஷ்மீர் அனந்த்நாக்கில் துப்பாக்கி சூடு - 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை; புல்வாமா வெடிகுண்டு தாக்குதலில் 2 வீரர்கள் வீரமரணம்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் புல்வாமாவில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் உயிரிழந்தனர். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே அனந்த்நாக் மாவட்டத்தில் இன்று காலை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தீவிரவாதிகளை ஒடுக்க தனிப்படைகள்

சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஆந்திரா, காஷ்மீர், ஒடிசா ஆகிய மாநிலங்கள் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக விளங்கி வருகிறது. ஆதலால் இங்கு அடிக்கடி போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தீவிரவாதிகளை ஒடுக்குவது குறித்து அம்மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக ஒவ்வொரு மாநிலமும் தனிப்படை குழு அமைத்துள்ளது.

அனந்த்நாக் தாக்குதல் ; 1 வீரர் படுகாயம், 2 தீவிரவாதி சுட்டுக் கொலை


ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள Bijbehara என்ற பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு  நடத்தினர். அதில் 1 வீரர் படுகாயம் அடைந்தார்.
பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் . தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்திலிருந்து ஏராளமான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

 புல்வாமாவில் 2 வீரர்கள் வீரமரணம்


தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஈத்கா அரிஹல் பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து, மண்ணில் ஐஇடி வகை குண்டுகளை தீவிரவாதிகள் புதைத்து வைத்திருந்தனர். வாகனத்தின்  அருகில் இந்த குண்டு வெடித்து சிதறியதில் 13 வீரர்கள் உட்பட 19 பேர் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் காயம் அடைந்த 2 வீரர்கள் சிகிச்சை பலனின்றி வீரமரணம் அடைந்தனர். அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடக்கிறது.கடந்த பிப்ரவரி 14ம் தேதி புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 44 பேர் பலியாகினர். அச்சம்பவம் நடந்த இடத்திலிருந்து 27 கிமீ தொலைவில் ஐஇடி குண்டு புதைத்து  வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Kashmiri ,terrorists ,soldiers ,Anantnag ,bomb attack ,Pulwama , Pulwama, Soldiers, Heroic, Anantnag, Attack
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...