×

வேளச்சேரியில் ரயில்வேக்கு சொந்தமான நிலத்தில் உள்ள வீடுகளை இடிக்க எதிர்ப்பு: செல்போன் டவரில் ஏறி ஒருவர் போராட்டம்

சென்னை: சென்னை வேளச்சேரியில் ரயில்வே துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலத்தை அகற்றுவதற்கு அதிகாரிகள் வந்தபோது, அவர்களை தடுத்து நிறுத்திய அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வேளச்சேரியில் உள்ள செல்போன் டவரில் ஏறி ஒருவர் போராட்டம் மேற்கொண்டார்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரி ரயில் நிலையம் அருகே 5 ஏக்கர் பரப்பளவில் ரயில்வேத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் சட்ட விரோதமாக 400க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், கடைகள், அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவு படி, இன்று வருவாய்த்துறை அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் இணைந்து ஆக்கிரமிப்பு பணிகளை அகற்றும் பணியில் காலை 8 மணி முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போலீசார் மற்றும் வருவாய்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே, ஒருவர் திடீரென அப்பகுதியில் இருந்த செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதையடுத்து வேளச்சேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்ற நபரை மீட்டு, அவருக்கு முதலுதவி சிகிச்சைகளை அளித்தனர். இதன்காரணமாக அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் அப்பகுதியில் ரயில்வே துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகளை அகற்ற அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Tags : houses ,Velachery ,Railway , Velachery, Railways, Land, Occupations, Resistance, Struggle, Cell Phone Tower
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...