×

அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவு

போர்ட்பிளேர்: அந்தமான் தீவுகளில் இன்று அதிகாலை 3.49 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது  ரிக்டர் அளவுகோலில் 4.9 அலகாக பதிவாகியுள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகளிலிருந்து சுமார் 32 கி.மீ. தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் காணப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. இருப்பினும் நிலநடுக்கத்தால் குடியிருப்புகள், கட்டிடங்களில் அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். இந்த நிலநடுக்கம் காரணமாக எந்தவித சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.  

இதேபோல அந்தமான் நிக்கோபார் தீவுகளில் கடந்த மே 22-ம் தேதி காலை 06.09 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவானது. மேலும் கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதியில் மட்டும் அந்தமான் நிகோபார் தீவுகளில் 20 முறை லேசான நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Earthquake ,Andaman Islands , Earthquake Strikes, Andaman Islands , Magnitude of 4.9, No Casualties
× RELATED ஆப்கானிஸ்தானில் இன்று பிற்பகல் 1.32 மணிக்கு மிதமான நிலநடுக்கம்