×

திண்டிவனத்தில் நீதிபதி முன்பு பயங்கரம் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற கைதி: போலீசார் மீது சரமாரி குற்றச்சாட்டு

திண்டிவனம்:  திண்டிவனம் நீதிபதி முன் கைதி ஒருவர் கழுத்தை பிளேடால் அறுத்து ெகாண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோசணை மருத்துவமனை சாலையை சேர்ந்தவர் சரண்ராஜ் (28). சாராய வியாபாரியான இவர் மீது 20 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனிடையே கடந்த 12ம் தேதி சரண்ராஜை சாராய வழக்கில் கைது செய்த ரோசணை போலீசார் திண்டிவனம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர்  மத்திய சிறையில் அடைத்தனர். நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றுக்காக  சரண்ராஜை ஆஜர்படுத்த நேற்று மாலை 3 மணிக்கு மீண்டும் திண்டிவனம் கோர்ட்டுக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

குற்றவியல் நீதிமன்றம்-2, நீதிபதி நளினிதேவி முன் ஆஜர்படுத்தினர். விசாரணையின் போது சரண்ராஜிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து கழுத்தில் இரண்டு இடங்களில் கிழித்து தற்கொலைக்கு முயன்றார். ரத்தம் வெளியேறி சரண்ராஜ் மயங்கி விழுந்தார். ஆயுதப்படை போலீசார் அவரை மீட்டு, திண்டிவனம் அரசு பொதுமருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து சரண்ராஜ் சகஜநிலைக்கு திரும்பினார். அதைதொடர்ந்து அவரை மீண்டும் போலீசார் சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.  முன்னதாக நீதிபதியின் விசாரணையின்போது சரண்ராஜ் தன்னை காவல்துறையினர் அடிக்கடி பொய் வழக்குகள் போட்டு கைது செய்கின்றனர். நிலுவையில் உள்ள வழக்குகளின் அடிப்படையில், எனக்கு ஜாமீன் கிடைக்க கூடாது என்ற எண்ணத்தில் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் என குற்றச்சாட்டு வைத்தார்.  இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.Tags : Tindivanam ,suicide bomber , Terror ,Tindivanam, Prisoner, Charges ,police
× RELATED திண்டிவனம் அருகே பெண்ணை மறுமணம்...