சிவகங்கை கலெக்டர் ஆபீசில் கணவர் போராட்டம் ‘பிரிஞ்சு போன மனைவியை கொஞ்சம் சேர்த்து வைங்க சார்’

சிவகங்கை:  பிரிந்து சென்ற மனைவியை மீண்டும் சேர்த்து வைக்கக்கோரி, சிவகங்கை  கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து கணவர் போராட்டம் நடத்தியதால்  பரபரப்பு ஏற்பட்டது. மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் சக்திகணேஷ்(40). ரயில்வே  கான்ட்ராக்டர். இவருக்கும், உறவினரான தேவிக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து  வாழ்கின்றனர். பிரிந்து சென்ற மனைவியை மீண்டும் தன்னுடன் சேர்ந்து வாழ சக்திகணேஷ் அழைத்துள்ளார். ஆனால் அவர் வரவில்லை.

இதையடுத்து  மனைவி மற்றும் குழந்தைகளை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி, ஏற்கனவே போலீஸ் ஸ்டேஷனில் மனு  அளித்துள்ளார். நடவடிக்கை இல்லாததால் சக்திகணேஷ் நேற்று சிவகங்கை கலெக்டர்  அலுவலக நுழைவாயில் அருகே தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் உரிய  நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதானப்படுத்தினர். இதையடுத்து சக்திகணேஷ்,  கலெக்டர் ஜெயகாந்தனிடம் மனு அளித்துவிட்டு சென்றார்.Tags : collector ,Sivagangai ,fight , Husband, Sivaganga ,Collector, British wife, little
× RELATED வாழ்வுரிமை கட்சியினர் கலெக்டரிடம் கோரிக்கை