பாக். அத்துமீறி தாக்குதல்

ஜம்மு: எல்லையில் பாகிஸ்தான் நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் வீரர் ஒருவர் காயமடைந்தார்.ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சலோத்ரி பகுதியில் எல்லைக் கட்டுப்பாடு அருகே கடந்த வாரம் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்நிலையில் நேற்று  முன்தினமும் பாகிஸ்தான் வீரர்கள் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதல் நேற்று காலை வரை நீடித்தது. பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே உள்ள கிராமங்கள், ராணுவ நிலைகளை  குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலுக்கு இந்திய ராணுவ வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர். பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.Tags : Pak ,attack , Pak. ,Infernal ,attack
× RELATED மலேசியாவுக்கு பாக். ஆதரவுக்கரம்:...