×

நம்பிக்கை குறைவால் எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரம் பற்றி மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: வீரப்ப மொய்லி பேட்டி

புதுடெல்லி: ‘‘எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தின் செயல்பாடு மீது தீவிர சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனால் தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு பயன்படுத்துவது குறித்து மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’’ என காங்கிரஸ் மூத்த தலைவர்  வீரப்ப மொய்லி கூறியுள்ளார். அவர் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தின் செயல்பாடு மீது ஒவ்வொருவரும் சந்தேகப்படுகின்றனர். இது மிகவும் முக்கியமான விஷயம். அமெரிக்கா உட்பட பல நாடுகள் எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரம் பயன்படுத்திவிட்டு மீண்டும் வாக்குச் சீட்டு  முறைக்கு திரும்பிவிட்டன என நினைக்கிறேன். சந்தேகம் எழுந்துள்ளதால், தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் வாக்குச் சீட்டு முறைக்கு திரும்ப ேவண்டும். இதற்காக மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இந்த வாக்கெடுப்பை  வாக்குச் சீட்டில் நடத்த வேண்டும். இந்த வாக்கெடுப்பு தே.ஜ கூட்டணிக்கு சாதகமாக இருந்தால் நல்லது. குறைந்தபட்சம் சந்தேகம் தீரும்.

 நான் சட்ட அமைச்சராக இருந்தபோது, எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரம் மீது சந்தேகம் எழுப்பப்பட்டது. இதற்காக ஒரு குழு அமைத்தோம். தற்போது தீவிர சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனால் எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரங்களை கைவிட்டு  வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். உ.பி ரேபரேலி தொகுதியில் கடந்த புதன்கிழமை பேட்டியளித்த சோனியா காந்தியும், ‘‘நாட்டின் தேர்தல் நடைமுறைகளில் கடந்த சில ஆண்டுகளாகவே பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. நெருப்பில்லாமல் புகையாது’’ என்றார். இந்நிலையில்  வீரப்ப மொய்லியும் வாக்குச் சீட்டு முறைக்கு மாற வேண்டும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. காங்கிரசின் சந்தேகத்துக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, ‘‘தேர்தல் தோல்விக்கான காரணத்தை ஆராயாமல், பழம்பெரும் கட்சி கர்வத்துடன் கருத்து தெரிவிக்கிறது’’ என்றார்.

Tags : Veerappa Moily ,referendum , confidence,electronic, Interview ,Veerappa Moily
× RELATED டிக்கெட் கிடைக்காததால் எந்த...