×

ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைக்கு ஒத்துவராது: இந்திய கம்யூனிஸ்ட் கருத்து

ஐதராபாத்: பாஜ.வின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் வெறும் பகட்டுதான், நடைமுறைக்கு ஒத்துவராது என இந்திய கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு 5 ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கிறது. இவற்றை தனித்தனியாக நடத்துவதால் தேர்தல் ஆணையத்துக்கு பணிச்சுமை மட்டுமின்றி, தேர்தல் செலவும் அதிகமாகின்றன. இதை  தவிர்க்க, ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்தும் வகையில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற கொள்கையை பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார்.

 இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சுராவரம் சுதாகர் ரெட்டி கூறுகையில், ‘‘சில மாநிலங்கள் தனது ஆட்சிக்காலத்தை பூர்த்தி செய்ய முடியாவிட்டால், அந்த மாநிலங்களில் என்ன நடக்கும்? அங்கு இடைத்தேர்தல்கள்தான்  நடைபெறும். இது மக்களின் ஜனநாயக உரிமையை பறிப்பதாக ஆகாதா? அடுத்த தேர்தல் நடக்கும் வரை மக்களை எப்படி காத்திருக்கச் செய்ய முடியும். இது பாஜ.வின் பகட்டான ஐடியாக்களில் ஒன்றுதான்’’ என்றார்.




Tags : country ,Communist Party of India , One country, one election, Communist,India
× RELATED வாக்குச்சாவடியில் தாமரை வடிவ அலங்காரம்