கட்சியைக் கலைத்துவிட்டு இந்திய தேசிய முஸ்லீம் லீக் நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்: தலைமை கழகம் அறிவிப்பு

சென்னை: இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சியைக் கலைத்து விட்டு நிர்வாகிகள் அனைவரும் அதிமுகவில் இணைத்துக் கொண்டனர் என்று அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.இதுகுறித்து தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரது இல்லத்தில் நேற்று  இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சியைக் கலைத்துவிட்டு, அக்கட்சியின் மாநிலத்  தலைவர் ஜவஹர் அலி தலைமையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது, பொருளாளர்  யூசுப் அலி, துணைத் தலைவர்களான முஜிபுர் ரஹ்மான், ஜமில் அஹமது, அப்துல் ரிபாயி, நாசர், மாநிலச் செயலாளர்களான அப்ரோஸ் அகமது,அப்துல் சலாம், சிக்கந்தர்,  முனீர், இளைஞர் அணிச் செயலாளர் முகமது அமீன், தொண்டர் அணிச் செயலாளர்  இப்ராஹீம், மாணவர் அணிச் செயலாளர் யாசீர் அஹமது, வழக்கறிஞர் அணிச் செயலாளர் சாதிக் அலி, மகளிர் அணிச்  செயலாளர் பாத்திமா பீவி, வர்த்தக அணிச் செயலாளர் ஷாஜஹான் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நேரில் சந்தித்து, தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.இவ்வாறு அதிமுக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Indian ,executives ,Muslim League ,chief minister , Dissolve ,party, Indian National Muslim League ,AIADMK
× RELATED சிகிச்சைக்கு வந்த 25 பெண்களிடம்...