×

பா.ஜ செயல் தலைவராக ஜே.பி.நட்டா நியமனம்: அமித்ஷா தலைவராக தொடர்வார்

புதுடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, பா.ஜ செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைவராக அமித்ஷா தொடர்ந்து நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான 2வது ஆட்சியில், மத்திய உள்துறை அமைச்சராக பா.ஜ தலைவர் அமித்ஷா நியமிக்கப்பட்டார். அதனால் கட்சி பொறுப்பை வேறு யாரிடமாவது ஒப்படைக்க வேண்டும் என அமித்ஷா கூறினார். ஆனால், அவர்  தலைமையில்தான் பாஜ பல தேர்தல்களில் வெற்றி பெற்றது. அதனால் அவரிடம் இருந்து கட்சித் தலைவர் பதவியை பறிக்க தலைமைக்கு விருப்பமில்லை. அதனால் கட்சியின் பொறுப்புகளை கவனிக்க செயல் தலைவரை நியமிக்க முடிவு  செய்யப்பட்டது.

செயல் தலைவரை தேர்வு செய்வதற்காக பா.ஜ நாடாளுமன்ற குழு கூட்டம் டெல்லியில் நேற்று மாலை கூடியது. இதில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இவர் இமாச்சலப்  பிரதேசத்தை சேர்ந்த பிராமின் தலைவர். பா.ஜ மேலிடத் தலைவர்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நம்பிக்கையை பெற்றவர். பாஜ தலைவராக அமித்ஷா தொடர்ந்து நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, அரியானா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜ கட்சியினரின் செயல்பாடுகளை  அமித்ஷா கவனிப்பார் எனத் தெரிகிறது.

Tags : JP Natta ,Amit Shah ,BJP , BJP leader, JP Natta , Amit Shah
× RELATED திருச்சியில் இன்று நடைபெற இருந்த...