அமெரிக்காவில் பயங்கரம் இந்திய வம்சாவளியினர் 4 பேர் சுட்டுக்கொலை

வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்திய வம்சாவளி குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின்  வெஸ்ட் டெஸ்மொய்னஸ்  பகுதியில் வசித்து வந்தவர் சந்திர சேகர் சுங்காரா(44). இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர், ஐடி துறையில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சுங்காரா(41). இவர்களுக்கு 15 மற்றும் 10 வயதில் இரண்டு மகன்கள் இருந்தனர். இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று காலை இவர்களது வீட்டில் நான்கு பேரும் துப்பாக்கியால் சுடப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து 4 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உடல் முழுவதும் குண்டு பாய்ந்து இருந்தது.கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் விருந்தினர்களாக தங்கியிருந்தவர்கள் சடலத்தை பார்த்த பின்னர் தான் போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக தெரிகிறது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : United States ,Indian , Terrorism , US kills,Indian-origin
× RELATED அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில்...