×

வழித்தட பிரச்னையில் டிரைவருக்கு மிரட்டல் போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டித்து குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

சேலம்: சேலத்தில் வழித்தட பிரச்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மிரட்டுவதாக கூறி, ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 ேபர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தீக்குளிக்க முயன்றனர். சேலம் புது பஸ் ஸ்டாண்ட் அடுத்த சாமிநாதபுரம் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜன் (36). சரக்கு ஆட்ேடா டிரைவர். நேற்று தனது குடும்பத்தினர்  5 பேருடன் கலெக்டர் அலுவலகம் வந்திருந்தார். திடீரென மண்ணெண்ணையை தன் மீதும், குடும்பத்தினர் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவர்களை தடுத்த போலீசார் விசாரணைக்காக டவுன் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து தேவராஜன் உறவினர்கள் கூறுகையில், ‘‘தேவராஜனுக்கு 800 சதுரடியில் வீடு உள்ளது.

அதனை ஒட்டிய வழித்தடத்தை சொந்தம் கொண்டாடுவதில், அருகில் உள்ள இருவருடன் தகராறு இருந்து வருகிறது. இதுபற்றி பள்ளப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு தினத்திற்கு முன்பு இன்ஸ்பெக்டர் சாலைராம் சக்திவேல் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக பேசி தேவராஜனை மிரட்டியுள்ளார். இதனால் அவர், குடும்பத்துடன் வந்து தீக்குளிக்க முயன்றுள்ளார்,’’  என்றனர்.

வைரலாகும் மிரட்டல் வீடியோ

இதனிடையே, பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டர் சாலைராம் சக்திவேல் விசாரணையின் போது தேவராஜனை மிரட்டும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில்,  இன்ஸ்பெக்டர் ‘‘யாராவது ஒரு மைனர் பொண்ணுகிட்ட கம்ப்ளைண்ட் வாங்கி, போக்சோவுல போட்டு விட்டுருவேன், தெரியுதா? நாங்க நெனச்சா என்ன வேணாலும் பண்ணலாம். பேன பெருச்சாளி ஆக்கலாம், யானையாவும் ஆக்கலாம், யானைய பேன் ஆக்கிறலாம். ஒரு சின்னபுள்ள அந்த ரூம்குள்ள இருந்துச்சு, நீங்க எல்லாம் சில்மிஷம் பண்ணீங்கனு கம்ப்ளைண்ட் வாங்கி, நடவடிக்கை எடுத்தா, அது பெரிய கேஸ். கொலை கேஸ விட பெரிய கேஸ் அந்த கேஸ்தான்,’’ என தேவராஜனை மிரட்டுகிறார்.

Tags : police inspector , Attempting to set fire, family,denouncing police inspector ,threatening driver
× RELATED காவல் நிலையத்தில் பொங்கல் விழா பாரம்பரிய முறையில் கொண்டாட்டம்