×

வேலூரில் 500க்கும் மேற்பட்டவர்களுடன் வந்து கலெக்டரிடம் கட்டுக்கட்டாக மனுக்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ

வேலூர்: குடிநீர், முதியோர், விதவை உதவித்தொகை கேட்டு திமுக எம்எல்ஏ நந்தகுமார், 500க்கும் மேற்பட்ட மக்களுடன் வந்து கலெக்டரிடம் கட்டுக்கட்டாக மனுக்களை வழங்கினார். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் ராமன் தலைமையில் நேற்று நடந்தது. அப்போது, அணைக்கட்டு தொகுதி திமுக எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார், தொகுதி மக்கள் 500க்கும் மேற்பட்டோருடன் வந்து கலெக்டரிடம் 1952 மனுக்களை அளித்தார். தொடர்ந்து தனது சார்பில் அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி அணைக்கட்டு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட ஊராட்சிகளில் ஊராட்சி சபை கூட்டம் எனது தலைமையில் நடந்தது.

அப்போது குடிநீர், கழிவுநீர், சாலை, தெருவிளக்கு, சிறுபாலம் கட்டுதல், மயானம் அமைத்தல், மின்இணைப்பு, வீட்டுமனைப்பட்டா, சுற்றுச்சுவர் அமைத்தல், குடிநீர் தொட்டி, சின்டெக்ஸ் டேங்க், நிழற்கூரை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் மனுக்களாக என்னிடம் அளித்தனர். குறிப்பாக முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை பயனாளிகளுக்கு பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது.  தகுதியற்றவர்களுக்கு வழங்கியது கண்கூடாக தெரிய வந்தது. எனவே விண்ணப்பங்களை உரிய ஆய்வு மேற்கொண்டு உடனே வழங்க வேண்டும் என கூறியிருந்தார். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Tags : DMK MLA ,Vellore , DMK MLA, 500 people, Vellore,
× RELATED திமுக எம்எல்ஏ, அதிமுக மாவட்ட செயலாளர்...