×

சென்னையில் மட்டும் 331 பள்ளிகள் உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சென்னை: சென்னையில் 331 பள்ளிகள் உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார். சென்னை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் தடையின்மை சான்றும் மற்றும் அங்கீகாரம் இல்லாமல் செயல்படக்கூடிய பள்ளிகளின் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ளார். அதன்படி சென்னை மாவட்டத்தில் மட்டும் தடையின்மை சான்றும் மற்றும் அங்கீகாரம் இன்றி செயல்படக்கூடிய 331 பள்ளிகளின் பட்டியலை அவர் வெளியிட்டிருக்கிறார். இந்த பள்ளிகளில் மாணவர்கள் படிப்பது அவர்களுக்கு பாதுகாப்பானதாகவும், அதேபோல் அவர்கள் கல்வி தகுதியற்றதாக ஆகிவிடும் என்பதால் இந்த பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதை பெற்றோர்கள் முற்றிலுமாக கைவிடவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த விவகாரம் எதன் அடிப்படையில் வந்ததென்றால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.

அதில் அங்கீகாரம் இல்லாமல் பல பள்ளிகள் செயல்படுவதாகவும் அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகள் செயல்படக்கூடாது என்ற ஒரு உத்தரவு பிறப்பித்ததன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் செயல்படுகின்றன என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமையில், அதேபோல் வட்டார கல்வி அலுவலர்கள் இவர்கள் ஆய்வு செய்த பிறகு அந்தெந்த பள்ளிகளுக்கு  தடையின்மை சான்றும் அங்கீகாரமும் வழங்கப்படும். அவ்வாறு அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளை மூட வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில் அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அங்கிகாரம் இல்லாத பள்ளிகளின் பட்டியலை மாவட்ட ஆட்சியர்கள் வெளியிடுகின்றனர். அந்த அடிப்படியில் ஏற்கனவே பல அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்கள் வெளியிடப்பட்டன. ஏற்கனவே சென்னை மாவட்ட ஆட்சியரின் ஆட்சிக்கு உட்பட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கான பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது சென்னை மாவட்டத்திற்கும் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கின்றன. இதை தொடர்ந்து இந்த பள்ளிகளில் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் சென்னை மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ளார். தற்போது சென்னை மாவட்டத்தில் வெளியிட்டுள்ள பட்டியலில் உள்ள பள்ளிகள் பெரும்பாலும் தொடக்கப்பள்ளிகளாகவே இருக்கின்றன. மேலும் இந்த மாதிரியான பள்ளிகளில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி இருக்காது எனவும், இப்படியான பள்ளிகளில் படித்து விட்டு வேறொரு பள்ளிகளுக்கு மாற்றம் பெரும் போதும் சிக்கல்கள் இருக்க கூடும் என்பதாலும், மேலும் தீ விபத்து ஏற்படுமேயானால் அதிலிருந்து பாதுகாக்க ஒரு சான்று வழங்கப்படும். இதையடுத்து கட்டிட சான்று இவை அனைத்தும் பள்ளிகள் பெற்றிருக்க வேண்டும்.இவ்வாறு அனைத்து சான்றுகளும் இருக்குமேயானால் அந்த பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கப்படும். இந்த நடைமுறையில் இல்லாத பள்ளிகளுக்கு தான் தற்போது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் உரிய அங்கீகாரம் மற்றும் தடையின்மைச் சான்று இல்லாமல் தொடர்ந்து இயங்கினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


Tags : Chennai ,schools ,District Collector , Chennai, 331 schools, without proper authorization, operates without, District Collector, Notice
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...