×

தூத்துக்குடி அருகே ராக்கெட் ஏவுதளம் அமையவுள்ள இடத்தில் நிலம் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம்  குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமையவுள்ள இடத்தில் நிலம் கணக்கெடுக்கும் பணியை வருவாய்த்துறை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.  தூத்துக்குடி மாவட்டம்  குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நில அளவீடு பணியானது முடிவடைந்த நிலையில் அதாவது தூத்துக்குடி மாவட்டம் கூடல்நகர் அருகே உள்ள அமராபுரம் என்ற பகுதியை மையமாக கொண்டு சுமார் 2.5  கி.மீ. சுற்றளவில் 3500 ஏக்கர் பரப்பளவில் இந்த ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான நில அளவீடு பணி முழுமையாக முடிவடைந்த நிலையில், தற்போது அந்த 3500 ஏக்கர் பரப்பளவில் எத்தனை மரங்கள் உள்ளன என்றும் மேலும் மக்கள் வாழ்வாதாரம் இருக்கின்றதா, எத்தனை குடியிருப்புகள் இருக்கின்றன, எவ்வளவு அகற்றப்பட வேண்டும் என்பதற்கான அளவீடு பணியானது தொடங்கியுள்ளது.

மேலும் திருச்செந்தூர் வட்டாட்சியர் மற்றும் அதற்கு கீழாக உள்ள ஆர்.ஐக்கள் மற்றும் வி.ஓக்கள் உள்ளிட்ட சுமார் 15க்கும் மேற்பட்டவர்கள் இந்த கணக்கிடும் பணியை தொடங்கியுள்ளனர். இதையடுத்து இன்னும் மூன்று நாட்களுக்கு இந்த கணக்கெடுக்கும் பணியானது இங்கு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதன் தொடர்ச்சியாக பொதுப்பணித்துறையினரால் இங்குள்ள மரங்கள், குடிசைகள், நிலங்கள் ஆகியவற்றிக்கு இழப்பீடு வழங்கும் மதிப்பீடு பணியானது நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்தபடியாக ராக்கெட் ஏவுதளத்திற்கான பூர்வாங்கும் பணி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த பணிகள் அனைத்துமே முடிவடைந்தால் மட்டுமே அடுத்தபடியாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பூர்வாங்கும் பணிகள் தொடங்கும்.

எனவே அதற்கு முந்தய பணியானது தற்போது நடைபெற்று வருகின்றது. மேலும் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளமானது கிட்டத்தட்ட நிலக்கோட்டையிலிருந்து 13.43 டிகிரியில் உள்ளது. ஆனால் இந்த குலசேகரன்பட்டினத்தில் அமைக்கப்பட்டால் நிலக்கோட்டையிலிருந்து 8 டிகிரி ஆனது இந்த  குலசேகரன்பட்டினத்தில் காணப்படும் என்பதால் தான் இங்கு அமைக்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக விஞ்ஞானிகள் கூட அறிவுறுத்தி வருகிறார்கள். தற்போது இந்த ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு முந்தய மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்யப்படும் கணக்கிடும் பணி, மதிப்பிடும் பணியானது தற்போது நடைபெற்று வருகிறது.


Tags : Thoothukudi , Thoothukudi, rocket launcher, land survey, work, origin
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...