திண்டுக்கல் முதல் கொடைரோடு வரை பேலஸ்ட் கிளீனிங் மெசின் மூலம் ரயில்வே தண்டவாளம் சீரமைப்பு

 *தண்டவாளம் இடையே ஜல்லிகளை சுத்தப்படுத்தி மணலை வெளியேற்றினர்

செம்பட்டி : திண்டுக்கல் முதல் கொடைரோடு வரை பேலஸ்ட் கிளீனிங் மெசின் மூலம் ரயில்வே தண்டவாளங்களை நிலைப்படுத்தினர். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தண்டவாளங்களை பராமறிக்கும் பணி நடைபெற்றது. தென்னக ரயில்வே, ரயில் தண்டவாளங்களை சுமார் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பேலஸ்ட் கிளீனிங் மெசின் மூலம் (சிறப்பு ரயில் இன்ஜின்) தண்டவாளங்களுக்கு இடையே உள்ள மணலை சுத்தப்படுத்தி ஜல்லி கற்களை இறுக்கம் கொடுத்து தண்டவாளங்களை நிலைப்படுத்தி சரிசமன் செய்கிறது.

இதனால் ரயில்கள் அதிவேகமாக செல்லும்போது அதிர்வுகள் ஏற்படாமல் இருக்கும். மேலும் இம்மாதிரி இறுக்கம் கொடுக்காமல் விட்டுவிட்டால், ரயில் தண்டவாளங்களில் செல்லும் சக்கரங்கள் பழுதடைய வாய்ப்புள்ளது என்பதால், ரயில்வே அதிகாரிகள் இம்மாதிரி பேலஸ்ட் கிளீனிங் மெசின் (நிலைப்படுத்தும் சுத்தம் செய்யும் இயந்திரம்) மூலம் தண்டவாளங்களை சீர்படுத்தி வருகின்றனர். இரண்டு பேலஸ்ட் கிளீனிங் மெசின் கொடைரோடு முதல் திண்டுக்கல் வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தண்டவாளங்களை சுத்தம் செய்து வந்தனர்.

அப்போது ஒரு பேலஸ்ட் கிளீனிங் மெசின் பழுதடைந்து மணல்களை அப்புறப்படுத்தாததால், ஒரு இயந்திரம் கொண்டு தண்டவாளங்களை சீர்படுத்தினர். இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இவ்வழியே தினசறி 50க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன. அதிவேக ரயில்களும் செல்கின்றன. அவ்வாறு செல்லும்போது தண்டவாளத்தின் அடியில் உள்ள ஜல்லிக்கற்கள் நொறுங்கியும், அதிர்ந்தும் கீழே இறங்கிவிடும். இதனால் ரயில்கள் செல்லும்போது ஏற்படும். சத்தத்தை குறைக்கவும் தண்டவாளங்களை சீர்படுத்தவும், குறைந்தது 5 முதல் 10 வருடங்களுக்கு ஒருமுறை பேலஸ்ட் கிளீனிங் மெசின் மூலம் தண்டவாளங்களை சுத்தம் செய்து தண்டவாளம் இடையே உள்ள ஸ்லீப்பர் கான்கிரீட் அடுக்குகளை உறுதிப்படுத்துகிறோம்’ என்றார்.

Tags : Dindigul ,Kodirod , Belast Cleaning Machine,Dindigul ,Kodai Road
× RELATED அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது...